Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM

தென்கிழக்காசிய இடதுசாரி கட்சிகளின் 2022-ன் தொழிலாளர் தின கூட்டறிக்கை
1 மே 2022

கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகமே கோவிட்-19 பெருந்தொற்றில் மூழ்கிருந்த போது, கால பருவநிலை நெருக்கடி மேலும் மோசமடைந்தது; உலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும், தென்கிழக்காசிய நாட்டு தொழிலாளர்கள் உட்பட அது ஒரு மிரட்டலாக இருந்தது; உலகலாவிய முதலாளித்துவ ஆட்சி மக்களின் வாழ்வாதாரத்தையும், நல்வாழ்வையும் பாதுகாக்க தவறியது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தொழிலாளர் வர்கமே.
கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் வறுமையை எதிர்நோக்கினர், வேலை இழந்தனர் மற்றும் பாதுகாப்பில்லாத ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டனர். வேலை செய்துக்கொண்டிருந்தவர்களும் இதில் பாதிக்கப்பட்டனர், அதாவது நிரந்தரமில்லாத வேலை நிலை மற்றும் சம்பள குறைப்பு சூழ்நிலையை அவர்கள் எதிர்நோக்கினர்.
தொழிலாளர்களின் இந்த மோசமான நிலையை ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் சுய இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்; தொடர்ந்து போர்களை தூண்டிவிட்டு, சாதாரண மக்களின் உயிரை பணைய வைத்தனர். இதனால் மிஞ்சியது உணவு நெருக்கடியும், மற்ற மற்ற கஷ்டங்களும்தான்.
மனிதகுலம் வாழக்கூடிய உலகையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் முதலாளித்துவம் தோல்வியடைந்துள்ளது. மக்களை விட இலாபத்தை முதன்மைப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள், உலகை காலநிலை பேரழிவுகள், அதிக போர்கள் மற்றும் மோசமான உலகளாவிய சமத்துவமின்மையின் விளிம்பிற்கு கொண்டு வந்திருக்கின்றன. மக்கள் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் சுபிச்சம் ஆகியவற்றின் அடிப்படையிலான சோசலிச மாற்றீட்டோடு, நிலையானதாக வாழும் போது, ஒடுக்குமுறை மற்றும் இலாப உந்துதல் முறையை மாற்றுவதற்கும், முதலாளித்துவ ஆட்சியை நிராகரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் கீழ்மட்டத்தில் இருந்து மக்கள் இயக்கத்தை தொடர்ச்சியாக உருவாக்குவது மிகவும் முக்கியமானதும் நடப்பு
சூழலுடன் இணக்கமானதும் ஆகும்.

மே தின உணர்வில், கீழே கையொப்பமிடப்பட்ட அமைப்புகளாகிய நாங்கள், பின்வருவனவற்றைக் கோருகிறோம்:
1.அனைவருக்கும் வேலை உத்தரவாதம் மற்றும் சமூக பாதுகாப்பு
குறைந்த கார்பன் சமூக உள்கட்டமைப்புகளை (infrastructure) உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், நிலையான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, சமூக வீட்டுவசதி வழங்குதல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ( பராமரிப்பு வேலை) போன்ற உற்பத்தித் துறைகளில் தலையிட்டு முதலீடு செய்வதில் அரசாங்கங்கள் பங்கு வகிக்க வேண்டும்.
மக்கள் கண்ணியமாக வாழ்வதற்குத் தகுந்த வருமானத்துடன் வேலைகளை உருவாக்குதல் மற்றும் உத்தரவாதம் செய்தல்; வேலையின்மை காப்பீடு மற்றும் உலகளாவிய ஓய்வூதியங்கள் உள்ளிட்ட விரிவான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், வேலைகள் இல்லாத நபர்களும் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2.பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல்
உலகளாவிய இலவச சுகாதார சேவை, இலவச தடுப்பூசி, இலவசக் கல்வி, வாழக்கூடிய சமூக வீட்டு வசதி, சுத்தமான நீர், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பொது போக்குவரத்து மற்றும் பிற சமூக உள்கட்டமைப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும். பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு முற்போக்கான வரிவிதிப்பதன் மூலமும் மற்றும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு நாடுகள் (ஆசியான் போன்றவை) புதிய தாராளவாத அமைப்புகளை நிராகரிப்பதன் மூலமும் தான் இந்த மாற்றங்கள்/ சேவைகள் சாத்தியப்படும்.
3. உணவுபாதுகாப்பை மேம்படுத்துதல்.
உணவு நெருக்கடியைச் சமாளிக்கவும், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதை மேம்படுத்தவும் ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
4. காலநிலைமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கைகளாக பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களை தவிர்த்து 100% புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்துதல், நிலம், காடுகள், நீர் மற்றும் பெருங்கடல்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களை மேற்கொள்ளுதல் , இதுவரை ஏற்பட்டுள்ள விளைவுகளிலிருந்து மீளவும்,விழிப்புணர்வு அடைவதற்கான திட்டங்களை மேற்கொள்ளவும், சுற்றுசூழலை பாதிக்காத நிலையான உற்பத்தியைத் தரக்கூடிய மறுதொழில்மயமாக்கல் திட்டங்களை உருவாக்குதல் போன்றவைகளையும் செயல்படுத்த வேண்டும் .
5.பாலின சமத்துவத்தை நிறுவுவதற்கு சட்டப்பூர்வமான முழு சமத்துவத்தையும் , உண்மையான சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும், LGBTQI+ சமூகங்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாட்டைத் தீர்மானிப்பதற்கான மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் .
6. தென்கிழக்குஆசியாவில் இராணுவ சர்வாதிகாரம் மற்றும் இராணுவ மேலாதிக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மீதான அடக்குமுறையை நிறுத்த வேண்டும், உழைக்கும் மக்கள் சிறந்த வாழ்க்கை நிலைமைகளுக்காக அவர்களின் கோரிக்கைகளை ஒழுங்கமைக்கவும் குரல் கொடுக்கவும் ஒரு ஜனநாயக இடத்தை நிலைநிறுத்துவதன் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் அளிக்கவும் வேண்டும்.
7. ஏகாதிபத்தியசக்தி மற்றும் பிராந்திய சக்தி தொடர்புடைய பூகோள அரசியல் மோதலை தணிக்க/ தவிர்க்க ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இராணுவக் கட்டமைப்பை நிறுத்த வேண்டும். புவிசார் அரசியல் பூசல்களைத் தீர்க்க அனைத்து நாடுகளும் புரிந்துணர்வு மரியாதை அடிப்படையில் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும்.தென்கிழக்கு ஆசிய கடற்பகுதியை இராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்க வேண்டும். தென்கிழக்கு ஆசியாவில் மையமிட்டிருக்கும் அனைத்து அமெரிக்க இராணுவ தளத்தையும் மூட வேண்டும்.
ஒரு சிறந்த உலகத்திற்கான நமது போராட்டத்தில் தொழிலாள வர்க்க ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் நமது முயற்சியைத் தொடர்வோம்.
கையொப்பமிட்டவா்கள்:
Supported by (organisations outside of Southeast Asia)