Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM
.jpeg)
புத்ராஜெயா – அக்டோபர் 1, 2024:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச முதியோர் தினத்தை இன்னும் அர்த்தம் பொதிந்ததாக உண்டாக்கும் வகையில் மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் 45 சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மகஜர் வழியாக அரசிடம் சமர்ப்பித்தது.
நமது நாட்டில் உள்ள முதியோர்களின் அவலநிலை குறித்து அக்கறை கொள்ளும் நோக்கில் மேற்கொண்ட மகஜர், புத்ரஜெயா, பிரதமர் துறை அலுவலகத்தில் பிரதமத் துறை சிறப்பு அதிகாரியிடம் இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக 45 சமூக அமைப்புகளுடனான ஒப்புதலோடு பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
65 வயது மற்றும் அதற்கு மேல் கொண்ட மூத்தவர்கள், அரசு ஓய்வூதியம் பெறாத அல்லது 1 மில்லியனுக்கும் குறைவாக EPF சேமிப்பை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் RM500 மாதாந்திர ஓய்வூதியமாக அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இந்த குறிப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. .
இன்று பிரதமர் அலுவலகத்தில் மகஜர் கையளிக்கும் நிகழ்வின் போது சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, PSM கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், PSM தேசிய பொதுச்செயலாளர் சிவரஞ்சனி மாணிக்கம், PSM தேசிய பொருளாளராக சோ சொக் க்வா, மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் நாடு தழுவிய நிலையில் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
1990-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொது மாநாட்டின் போது அக்டோபர் 1-ஆம் தேதி உலக முதியோர் தினத்தை கொண்டாடுவதற்கு 45/106 என்ற வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதியோர்களை அவர்களின் முதுமை காலத்தில் வறுமையிலிருந்து பாதுகாக்க நாம் தவறினால், உலக முதியோர் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமில்லை. முதியோர்களுக்கான இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் நமது முதியோர்களுக்கு உறுதியான ஒரு வாழ்வாதார நம்பிக்கையை அரசாங்கத்தால் கொடுக்க முடியும். இல்லையென்றால், சுதந்திரமான, கண்ணியமான மற்றும் கௌவரவமாக நமது மூத்தவர்கள் வாழ முடியாது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் PSM கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் பேசிய காணொளி இணைப்பில் இருக்கிறது. பார்க்கவும்.