Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM
அரசு சார்ந்த அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களுக்குச் சம்பள உச்ச வரம்பை விதிக்க PAC-இன் கருத்துக்கு பி. எஸ். எம் ஆதரவு.
அரசு சார்ந்த அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அல்லது நிர்வாக இயக்குநர்களுக்கு சம்பள உச்ச வரம்பை நிறுவ பொதுக் கணக்குக் குழு (PAC) விடுத்த கோரிக்கையை மலேசிய சோசலிஸ்ட் கட்சி (PSM) வரவேற்கிறது. தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அல்லது நிர்வாக இயக்குநர்களுக்கு அதிகப்படியான சம்பளம் குடுக்கப்படுகிறது குறித்த புகார்கள் புதிதல்ல.
2018 ஆம் ஆண்டில், MAVCOM-இன் நிர்வாகத் தலைவர் RM 85,000 சம்பாதிக்கிறார் என்பதைக் கண்டறிந்த பின்னர், சட்டரீதியான அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் GLC களின் தலைவர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை மறு ஆய்வு செய்ய அப்போதைய பிரதமர் ஓர் உத்தரவை வெளியிட்டார். மிக சமீபத்தில் கூட, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அரசு சார்ந்த அமைப்புகளின் மேலாண்மை மற்றும் ஆளுகை குறித்த வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியபோது ஒரு அரசாங்க நிறுவனத்தின் தலைவர் RM 79,000 அளவுக்கு அதிகமான சம்பளத்தைப் பெறுவதை கண்டித்தார்.
இத்தகைய சூழ்நிலைகள் நம் நாட்டில் நிலவும் வருமான இடைவெளியையும் சமத்துவமின்மையையும் அதிகரிக்கும். இன்றைய சூழலில், ஒரு அரசாங்க அமைப்பின் தலைவர் அந்த நிறுவனத்தில் RM1,500 என்ற குறைந்தபட்ச ஊதியத்தை சம்பாதிக்கும் ஒரு ஊழியரின் மாத சம்பளத்தை விட 50 மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகிறார். அல்லது தங்கள் தினசரி ஊதியமாக RM3,500 என்ற மாதாந்திர சம்பளத்திற்கு சமமாக சம்பாதிக்கிறார்.
ஒரு நிறுவனத்திற்கு சம்பள உச்ச வரம்பை அமைப்பது ஒரு புதிய கருத்து அல்ல. அரசு ஆதரவுடைய அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வருடாந்திர சம்பள உச்சவரம்பை அமல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல விளையாட்டுத் துறைகளில் சம்பள வரம்புகள் உள்ளன என்பதையும் நாம் பார்க்க முடியும்.
ஆதலால் PSM பரிந்துரைகள்:
தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் உயர்த்தப்படுவதற்கு முன்பு முதலில் நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
உதாரணமாக, அத்தகைய நிறுவனத்தில் மிக உயர்ந்த சம்பளம் மிகக் குறைந்த சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது. இந்த சூழலில், போனஸ், பங்கு விருதுகள் மற்றும் பிற சலுகைகள் போன்ற சம்பளம் அல்லாத சலுகைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மக்களுக்குச் சேவைகளை வழங்குவதிலும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் மிகவும் திறம்படவும் விரைவாகவும் செயல்படுவதற்கு அரசாங்கம் சட்டரீதியான அமைப்புகளை நிறுவியது. தொழில் வல்லுநர்கள் அல்லது அரசியல்வாதிகள் தங்களுக்காக பணம் திரட்டுவதற்கான தளங்களாக அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தலைமை நிர்வாக அதிகாரியை விட குறைந்தபட்ச அல்லது சராசரி ஊதியம் பெறும் ஒரு தொழிலாளி கூடுதல் வருமானத்தைப் பெறுவது நல்லது. ஒரு தொழிலாளி அந்த கூடுதல் வருமானத்தை அடிப்படை தேவைகளுக்காக செலவிடுவார், மேலும் அந்த பணம் உள்ளூர் பொருளாதாரத்திற்குள் இருக்கும், ஒரு இயக்குநரோ, தனிப்பட்ட இலாபத்திற்காக அதை சேமித்து வைப்பார்.
காந்திபன்
மத்திய செயலவை உறுப்பினர்,
மலேசிய சோசலிஸ்ட் கட்சி (PSM)